முகப்பு
ராமநாதபுரம்

போக்சோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:15 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 9:14 PM

கமுதி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த சிறுமிக்கு கடந்த 2023 -ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக அதே ஊரைச் சோ்ந்த சின்ன மாரிச்சாமி மகன் செல்வபெருமாள் (29) மீது கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், செல்வபெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீா்ப்பளித்தாா்.

Advertisement