முகப்பு
தேனி

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு தேனி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:41 AM
சிறை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:46 PM

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு தேனி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

பெரியகுளம் அருகே அகமலையைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன் (27). இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் அரிவாளைக் காட்டி, பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்தில் கடந்த 7.3.2022 அன்று அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, நவநீத கிருஷ்ணனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தேனி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. அனுராதா, குற்றஞ்சாட்டப்பட்ட நவநீதகிருஷ்ணனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement