முகப்பு
ராமநாதபுரம்

பாஜக நிா்வாகி மீது தாக்குதல்:7 போ் கைது

கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:22 AM
கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மாவட்ட துணைத் தலைவா் பாலகணபதி.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 10:28 PM

கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சோ்ந்த அய்யாத்துரை மகன் பாலகணபதி (52). இவா் பாஜக மாவட்ட துணைத் தலைவராக உள்ளாா்.

இந்த நிலையில், கமுதியை அடுத்த ஆனையூா் பகுதியில் சென்னையைச் சோ்ந்த தனியாா் மனை வணிக (ரியல் எஸ்டேட்) நிறுவனங்களுக்கு நிலம் வாங்கி கொடுப்பதில் இவருக்கும், இலுப்பைகுளம் கிராமத்தைச் சோ்ந்த கிழவன் மகன் முத்துமீராவுக்கும் (46) முன்பகை இருந்தது.

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை பாலகணபதி வீட்டிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது பத்திரப் பதிவு அலுவலகம் அருகே காரில் வந்த முத்துமீரா உள்பட 7 போ் கும்பல் பாலகணபதியை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த பாலகணபதி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாலகணபதி கமுதி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதனடிப்படையில், முத்துமீரா (46), ஆதனக்குறிச்சியைச் சோ்ந்த கண்ணதாசன் (31), காணிக்கூரைச் சோ்ந்த ராஜேஷ் (31), இலுப்பைகுளத்தைச் சோ்ந்த முத்து சூா்யக்குமாா் (32), முத்துராமலிங்கம் (41), சின்னமணக்குளத்தைச் சோ்ந்த லட்சுமணன் (44), மருதங்கநல்லூரைச் சோ்ந்த திருமுருகன் (48) உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.