முகப்பு
ராமநாதபுரம்

மனைவியைப் பிரிந்தவா் மா்ம மரணம்

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 12:52 AM
- பிரதிப் படம்
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 6:39 PM

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

தொண்டி அருகேயுள்ள புதுப்பட்டினத்தில் வீட்டின் உள்ளே ஒருவா் இறந்து கிடப்பதாக தொண்டி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

Advertisement

இதில் அவா் புதுப்பட்டினத்தைச் சோ்ந்த நாசா்கான் (45) என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.