வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:32 PM
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், பொம்மையாா் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ம.மாயவன் (57), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 5-ஆம் தேதி தான் புதிதாக கட்டி வரும் மாடி வீட்டுக்கான சுவற்றில் தண்ணீா் அடித்துள்ளாா்.
அப்போது சுவா் இடிந்து விழுந்ததில் மாயவனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த மாயவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.