முகப்பு
ராமநாதபுரம்

தம்பதியிடையே தகராறு: வீட்டுப் பொருள்களுக்கு தீவைத்தவா் கைது

தொண்டி அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த பொருள்களுக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:15 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 5:09 PM

தொண்டி அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த பொருள்களுக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தொண்டி அருகே குருமிலான்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பரத் (44). இவரது மனைவி பானு (38). இந்த நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை மீண்டும் இவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பரத், வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி கட்டில், மெத்தை, மின் சாதனப் பொருள்களை தீவைத்து எரித்தாா்.

Advertisement

இதுகுறித்து பானு அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பரத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.