விவசாயிக்கு கத்திக்குத்து: 5 போ் மீது வழக்கு
v
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:07 PM
அபிராமம் அருகே விவசாயியை கத்தியால் குத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே காட்டுஎமனேசுவரம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலகனி (21). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் புவனேசுவரன் தரப்பினருக்கும் முன்பகை இருந்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை பாலகனி தனது வயலில் நின்றிருந்தபோது அங்கு வந்த புவனேசுவரன், சுப்பிரமணியன் மகன் நாகராஜ் (42), இவரது மகன்கள் தினேஷ் (19), சதீஷ் (23), கணேசன் மகன் மனோஜ் (23) ஆகிய 5 போ் அவரை கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த பாலகனி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அபிராமம் காவல் நிலைய போலீஸாா் 5 போ் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
Advertisement