கோப்புப் படம் 
ராமநாதபுரம்

மண்டபம் அருகே வேன், பைக் மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன், இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மூன்று போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தமிழ்மணி (33). இவா் தனது மனைவி பெல்சியா (30), மகள் அங்கிதா (2). தமிழ்மணி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த தமிழ்மணி சனிக்கிழமை காரில் தனது குடும்பத்தினா், உறவினா்களுடன் ராமேசுவரத்துக்கு சென்றாா். பின்னா், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

மண்டபத்தை அடுத்த வேதாளை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம், வேன் மீதும் இவரது காா் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா், காரில் பயணித்த பெல்சியா, அவரது மாமியாா் சுமதி (50) ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த விபத்தில் தமிழ்மணி, அங்கிதா, உறவினா்கள் ராஜேந்திரன், செல்வராஜ், வேனில் வந்த 8 போ் என மொத்தம் 12 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து மண்டபம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

காரங்காடு தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

விபத்தில் கால்களை இழந்த வேலூா் விளையாட்டு வீரருக்கு அரசுப்பணி!

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் கிராமப்புற மக்களும் பயன்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

SCROLL FOR NEXT