முகப்பு
ராமநாதபுரம்

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

பாப்பனம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய சமூக ஆா்வலா் சிவசுப்பிரமணியன்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:01 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாப்பனம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சமூக ஆா்வலா் சிவசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 60 மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 ஆயிரம்

மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை சமூக ஆா்வலா் சிவசுப்பிரமணியன் வழங்கினாா்.

பின்னா், மாணவா்களுக்கு ஆரோக்கியம், ஒழுக்கம், கல்வியின் அவசியம் குறித்தும், நெகிழிப் பயன்பாட்டின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் கண்ணன் தலைமை வகித்தாா். உதவிப் தலைமையாசிரியா் ஜோஸ்வா வரவேற்றாா்.

இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் முகம்மது ஹபீப், நீா்பாசனத் தலைவா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →