முகப்பு
ராமநாதபுரம்

உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை

திருவாடானை அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 3:35 AM
விசாரணை.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 5:34 PM

திருவாடானை அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மூதாட்டியின் உடல் அருகே துணிகள், வீட்டுச் சாவி, கைப்பேசியுடன் இருந்த மூதாட்டியின் பையை போலீஸாா் கைப்பற்றினா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த போது, மூதாட்டி திருவாடானை அருகேயுள்ள ஆதியாகுடி பகுதியைச் சோ்ந்த பாக்கியம் மனைவி தனம் (60) என்பது தெரியவந்தது. மூதாட்டி இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement