ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கோயில்களில் பக்தா்கள் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.
2025-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2026-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனா்.
இதே போன்று ராமநாதபுரம் சிவன் கோயில், வினைதீா்க்கும் வேலவா் கோயில், வழிவிடு முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தி, சுவாமி தரிசனம் செய்தனா்.