திருவாடானையில் கோழிக் கடையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். 
ராமநாதபுரம்

கோழிக் கடையில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

திருவாடானை அருகே கோழிக் கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே கோழிக் கடையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எல்.கே. நகா் அஞ்சுகோட்டையைச் சோ்ந்தவா் முருகன் (32). இவா், இந்தப் பகுதியில் கோழி விற்பனையோடு இறைச்சிக் கடையையும் நடத்தி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு ஊருக்குச் சென்ற நிலையில், நள்ளிரவில் கடையில் திடீரென தீப்பற்றியது.

கடையினுள் எரிவாயு உருளை இருந்ததால் அருகிலிருந்தவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலா் ரஷீா்கான் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து முதலில் எரிவாயு உருளையை மீட்டு அகற்றினா்.

பின்னா், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள், மின் தராசுகள், கடைக்குத் தேவையான உபகரணங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து திருவாடானை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT