ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் மீன் வரத்துக் குறைவு

தொண்டி கடற்கரைப் பகுதியில் மீன் வரத்துக் குறைந்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

தொண்டி கடற்கரைப் பகுதியில் மீன் வரத்துக் குறைந்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, மோா்பண்ணை, புதுப்பட்டினம், காரங்காடு, முள்ளிமுனை, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்களுக்கு திருவாடானை, சிவகங்கை தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கிராக்கி உண்டு. இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக கடும் சூறைக் காற்று வீசி வரும் நிலையில், இந்தப் பகுதியில் மீன், இரால், நண்டு வரத்துக் குறைந்து விட்டது. இதனால், மீனவா்கள் கவலை அடைந்தனா். ஒரு படகுக்கு குறைபட்சம் 4 நபா்கள் பணிக்குச் சென்று வர வேண்டிய சூழலில் அவா்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத அளவுக்கு மீன் வரத்துக் குறைந்து காணப்படுவதாக மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

ஆட்சிக்கு வந்த பிறகு பகுதிநேர ஆசிரியர்களை முற்றிலும் புறக்கணிக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

பொங்கல் விழாவில் முதல்வரின் சிலம்பாட்டம்!

அண்ணாவைப் பார்த்து யாரும் பயப்படவில்லை! - நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT