திருவாடானை அருகேயுள்ள நம்புதாளை தமிழ்நாடு கிராம வங்கிக் கிளையில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வங்கிப் பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வங்கியின் மேலாளாா் தானப்பன் தலைமை வகித்தாா். துணை மேலாளா் கோகிலவாணி, காசாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் வேஷ்டி, பெண்கள் சேலை கட்டி வந்து பொங்கல் வைத்தனா். பின்னா், வாடிக்கையாளா்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறி, இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகை மதிப்பீட்டாளா் சிவக்குமாா், அலுவலக உதவியாளா் வினோத்குமாா், பாண்டித்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.