முகப்பு
இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர் கவனத்துக்கு! கணக்கு மூடப்படலாம்?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் மூடப்படலாம் என அறிவிப்பு.

Updated On : 18 மார்ச், 2026 at 1:42 PM
பஞ்சாப் நேஷனல் வங்கி - file photo
பகிர்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கியிலிருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதாவது, பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் கேஒய்சி பூர்த்தி செய்யப்படாவிட்டால் மூடப்படும் என்பதே அது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருந்து, அதனைப் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக் கிளைக்கு வந்து கேஒய்சி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யப்படாத வங்கிக் கணக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கித் தரப்பிலிருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை, கேஒய்சி பூர்த்தி செய்யப்படாவிட்டால், எந்த அறிவிப்பும் இன்றி 2026, ஏப்ரல் 16ஆம் தேதி வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் என்றால் எப்படி வரையறுப்பது என்று ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்த வங்கிக் கணக்கிலிருந்து வாடிக்கையாளர் எந்தவிதமான பணப்பரிமாற்றமும் செய்யாமல் இருந்தால் அது பயன்பாடற்ற வங்கிக் கணக்காக வரையறுக்கப்படும்.

இவ்வாறு ஆக்டிவ் இல்லாத வங்கிக் கணக்குகளை, ஒருவர் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இணையதளம் வாயிலாகவும், செயலிகள் அல்லது வங்கியின் எந்தக் கிளைக்கும் வந்து, கேஒய்சி தகவல்களைக் கொடுத்து கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம். கேஒய்சி விதிமுறைகள்படி, ஒருவர் அனைத்து சான்றிதழ்களையும் அளித்து நடைமுறை பூர்த்தியானால், அந்த வங்கிக் கணக்கு செயல்பாட்டுக்கு வரும்.

அடுத்து, வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நேரடியாக கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைக்குச் சென்று, வங்கிக் கணக்கைப் புதுப்பித்துக் கொடுக்க கடிதம் வழங்கலாம். கேஒய்சி சான்றிதழ்களையும் உடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Punjab National Bank announces that inactive bank accounts may be closed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.