வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க.. பொறியியல் பட்டதாரிகளுக்கு பஞ்சாப் வங்கியில் வேலை!
பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மே. 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer(Civil)
காலியிடங்கள்: 21
Advertisement
Advertisement
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer(Electrical)
காலியிடங்கள்: 7
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer(Mechanical)
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில்/கன்னியாகுமரி, விருதுநகர் போன்ற இடங்களில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 27.5.2026
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.59. இதர அனைத்து பிரிவினருக்கும் ரூ.1,180. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnb.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
PUNJAB NATIONAL BANK INVITES ONLINE APPLICATIONS FROM ELIGIBLE CANDIDATES RECRUITMENT FOR THE SPECIALIST OFFICERS POSTS
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.