பொதுத்துறை நிறுவனத்தில் ஏராளமான வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய பொதுத்துறை நிறுவனம் ஐஆர்இஎல் இந்தியா-வில் நிரப்பப்பட உள்ள நிரந்த பணியிடங்கள் குறித்து...
மத்திய அரசின் அணுசக்தித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 'மினி ரத்னா' வகை-1 அந்தஸ்து கொண்ட ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஐஆர்இஎல் இந்தியா. மும்பையை அலுவலகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இல்மனைட், ரூட்டில், சிர்கான், சில்லிமனைட், கார்னெட் போன்ற கனிமங்களை உற்பத்தி செய்வதற்காகச் சவரா (கேரளம்), மணவாளக்குறிச்சி (தமிழ்நாடு) மற்றும் ஒரிசா சான்ட்ஸ் காம்ப்ளக்ஸ் (ஒடிசா) ஆகிய இடங்களில் அணுக்கனிமச் சுரங்க மற்றும் கனிமப் பிரிப்பு ஆலைகளை இயக்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மாற்றங்களால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவும், தகுதிவாய்ந்த, திறமையான, அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல்மிக்க இந்தியக் குடிமக்களிடமிருந்து பின்வரும் (நிரந்தர) பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விவரங்களை பார்ப்போம்...
Advertisement
Advertisement
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CO/HRM35/2026
பணி: Assistant Manager
பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 6
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு : Electrical
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Chemical
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண் டும்.
பிரிவு: Mining
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Industrial Safety
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல் துறையில் தீ மற்றும் பாதுகாப்பு பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Instrumentation
காலியிடம்: 1
தகுதி: பொறியியல் துறையில் இன்ல்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ல்ட்ருமென்டேஷன், இன்ல்ட்ருமென்டேஷன் மற்றும் கண்ரோல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடம்: 1
தகுதி: சிஏ, சிஎம்ஏ தேர்ச்சி அல்லது 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.காம் தேர்ச்சியுடன் நிதியியல் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியும், 2 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: HRM
காலியிடங்கள்: 4
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மனிதவள மேலாண்மை, பணியாளர் மேலாண்மை, தொழில் உறவுகள், நிறுவன மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தொழிலாளர் நலன் பிரிவில் முதுநிலைப் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Rajbhasha
காலியிடங்கள்: 2
தகுதி: இந்திய மற்றும் ஆங்கில பிரிவில் முதுநிலைப் படிப்புடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Company Secretary
காலியிடம்: 1
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐசிஎஸ்ஐ-உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 10.8.2026 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000
தேர்வு செய்யப்படும் முறை: உளவியல் அளவீட்டுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.irel.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.8.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
IREL Limited Recruitment of Executives for Various Posts on Regular Basis
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.