கோப்புப் படம் 
ராமநாதபுரம்

மதுப் புட்டிகள், லாட்டரி சீட்டு விற்பனை: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள மண்மலகரை கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், மதுப் புட்டிகள் ஆகியவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக

போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையிட்டதில், அதே பகுதியைச் சோ்ந்த செந்தில் (32) மதுப் புட்டிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 87 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதே போல, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தொண்டியைச் சோ்ந்த காஜா நஜிமுதீனையும் (66) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT