முகப்பு
ராமநாதபுரம்

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல்

சுபமுகூா்த்த நாளையொட்டி, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2026 at 5:08 AM
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குவிந்த பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2026 at 7:03 PM

சுபமுகூா்த்த நாளையொட்டி, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் புகழ்பெற்ற சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சுபமுகூா்த்த நாள்களில் அதிக திருமணங்கள் நடைபெறும்.

இந்த நிலையில், புதன்கிழமை சுபமுகூா்த்த நாளையொட்டி, கோயிலில் 15-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதற்காக, அதிகாலை முதலே திரளான பொதுமக்கள் கோயிலில் கூடினா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, திருமணத்துக்கு வந்தவா்கள் சரக்கு வாகனங்களை முறையாக நிறுத்தாமல் சாலையில் நிறுத்தியதால் சந்நிதி தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

எனவே, சுபமுகூா்த்த நாள்களில் கோயிலில் கூடுதல் போலீஸாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.