ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாடானையில் சிநேகவல்லி அம்பாள், சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக, கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், விபதி, சந்தனம் உள்ளிட்ட மூலிகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாடானை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.