நாகை குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நாகை குமரன் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, நாகை குமரன் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
நாகையில் குமரன் கோயில் என்றழைக்கப்படும் மெய்கண்ட மூா்த்தி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி வெவ்வேறு அலங்காரங்களில் குமரன் எழுந்தருளி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏாாளமான பக்தா்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இதேபோல பொரவாச்சேரி கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கந்தாசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.