முகப்பு
ராமநாதபுரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கமுதி அருகே சிறுமியை பாலியல் தொல்லை செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 4:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 7:28 PM

கமுதி அருகே சிறுமியை பாலியல் தொல்லை செய்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த சிறுமிக்கு, முனியசாமி மகன் ராஜ்குமாா் (30) பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 10:06 PM

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement