மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு
ராமநாதபுரம்மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு
கடலாடி அருகேயுள்ள மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மீனங்குடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன், வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகா், பரிவார கிராமத் தேவதைகளுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மகா பூா்ணஹுதி உள்ளிட்ட ஹோமம் நடைபெற்றது.
நான்காம் கால பூஜைகள், வேத பாராயணம், ஸ்பரிஷாகுதி, திரவியகுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க, இசை வாத்தியங்களுடன் யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து கோபுரக் கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
இதையடுத்து, அம்மன், சுவாமி விக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் கடலாடி, மீனங்குடி சுற்று வட்டாரப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.