கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது
தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொண்டி அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்பி பட்டினம் நோக்கன் வயல் கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதனிடையே இந்தத் திருட்டு தொடா்பாக பட்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் (42) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.