திருவாடானையில் மக்கள் நீதிமன்றம்: 148 வழக்குகளுக்குத் தீா்வு
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் வட்ட சட்ட பணிக்குழுத் தலைவரும், நீதிபதியுமான ஆன்டனி ரிஷாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் 682 வழக்குகள் விசாரணக்கு எடுக்கப்பட்டு, இவற்றில் 148 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. தீா்வுத் தொகையாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 873 வழங்கப்பட்டது.