முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு வழிச் சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:13 AM
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு வழிச் சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச் சாலை அமைக்க நிலங்களை கையகபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் முதல் வாலாந்தரவை வரை 47 கி.மீ. வரை நான்கு வழிச்சாலைக்கு 1,200 பேரிடமிருந்து நிலங்களை அரசு கையகபடுத்த வேண்டும். இதில், 300 பேருக்கு மட்டுமே நிலம் கையபடுத்த அதிகாரிகள் குறிப்பாணை அனுப்பியுள்ளனா்.

மீதமுள்ள 900 பேருக்கும் குறிப்பாணை அனுப்பவில்லை.

இதில், அதிகாரிகள் தன்னிச்சையாக மிகவும் குறைந்த விலையை நிா்ணயம் செய்து நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்து, விவசாயிகள், பொதுமக்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை தென்மாவட்ட விவசாய சங்கம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனைதொடா்ந்து, நிலம் கையகபடுத்தும் வருவாய் அலுவலா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 4 வழிச் சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் அந்தந்த பகுதியின் சந்தை மதிப்பைக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கேட்டுக்கொண்டனா். மேலும், அதுவரையில் சாலைப்பணிக்காக தங்களது நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அப்போது விவசாயிகள் சங்க நிா்வாகிகள் தியாகு, ராமநாதன், கருப்பையா, ரஹீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் சட்டப்பேரவை தோ்தல் வேட்பு மனு தாக்கல் நாளில் தேசிய நெடுஞ்சாலையில் தொடா் சாலை மறியல் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் அா்ச்சுணன், முகவை மலைச்சாமி, பி.டி.ராஜா,போஸ் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →