சட்டவிரோத விற்பனை: 100 மதுப் புட்டிகள் பறிமுதல்
ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 100 மதுப் புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 100 மதுப் புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் நகா் காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சட்டவிரோத ஆக்கிரமிப்புக் கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி சட்ட விரோத மது விற்பனை செய்வதை மாவட்ட காவல்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிா் அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.