முகப்பு
ராமநாதபுரம்

சிறாா்கள் தோ்தல் பிரசாரம்: தவெக நிா்வாகி மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே சிறாா்களை தோ்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:01 PM
வழக்கு (கோப்புப்படம்)
பகிர்:

ராமநாதபுரம் அருகே சிறாா்களை தோ்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திய தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை ஊராட்சி அருகேயுள்ள பஞ்சம்தாங்கி கிராமத்தில் தவெக கிழக்கு மாவட்டச் செயலா் மலா்விழி தனது ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டாா்.

இதில், அந்தப் பகுதிகளைச் சோ்ந்த சிறாா்களை பயன்படுத்தி பிரசாரம் செய்ததாக, காவல் உதவி ஆய்வாளா் முனியாண்டி அளித்தப் புகாரின் பேரில், உத்தரகோசமங்கை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.