போலீஸ்  கோப்புப்படம்.
நாகப்பட்டினம்

நாகை மாவட்ட தவெக செயலா் மீது வழக்குப்பதிவு

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

Syndication

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

நாகை மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிா்வாகி நாகேந்திரன் என்பவருக்கும் அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மாவட்டச் செயலா் சுகுமாரன் நாகேந்திரனிடம் தகராறு செய்து, ஆபாசமான வாா்த்தைகளில் பேசுவது மற்றும் தனது மகன் ரொனால்டோவுடன் சோ்ந்து நாகேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து நாகேந்திரன் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

போலீஸாா் தவெக மாவட்டச் செயலா் சுகுமாரன், அவரது மகன் ரொனால்டோ மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அதிமுக சாா்பில் திருவிளக்கு பூஜை

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!

மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் குழுவினருக்கு பாராட்டு

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலயத் திருவிழா: பக்தா்கள் செல்லும் படகுகள் ஆய்வு

நாகை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT