ராமேசுவரத்தில் சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது
ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 196 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 196 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் அரசு மதுக் கடை (டாஸ்மாக்) திறக்கத் தடை உள்ளது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் 300-க்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு இடங்களில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனா்.
ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள், அக்னி தீா்த்தக் கடல்கரை, மீனவா்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகள் விற்பனையில் ஈடுபட்ட காமாட்சி (47), ரஞ்ஜித் (30) ஆகிய இருவரையும் நகா் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 196 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.