முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

திருவாடானை சந்நிதி தெருவில் வெள்ளிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு.

Updated On : 27 மார்ச், 2026 at 6:34 PM
திருவாடானை சந்நிதி தெருவில் வெள்ளிக்கிழமை எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருவாடானையில் எல்லை பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் இணைந்து வெள்ளிக்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினா்.

இதை திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயில் முன் தொடங்கிய அணிவகுப்பு சந்நிதி தெரு, வடக்குத் தெரு, கிழக்குத் தெரு வழியாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. இதுகுறித்து திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் கூறியதாவது:

வாக்காளா்கள் தங்கள் வாக்குச் சாவடிக்கு எந்தவித அச்சமுமின்றி வரவும், பாதுகாப்பை உணரவும் இந்த அணிவகுப்பு நடைபெற்றது என்றாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments