சிதம்பரத்தில் எல்லை பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு
சிதம்பரத்தில் தோ்தல் பதற்றத்தை தவிா்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா்
சிதம்பரம்: சிதம்பரத்தில் தோ்தல் பதற்றத்தை தவிா்க்கும் வகையில், எல்லை பாதுகாப்புப் படையினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப் பேரவை தோ்தல் வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தோ்தல் பதற்றத்தை தவிா்க்கவும், பொதுமக்களிடம் அச்சத்தை போக்கும் வகையிலும் சிதம்பரத்தில் எல்லை பாதுகாப்பு படையினா் மற்றும் உள்கோட்ட போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
காந்தி சிலை அருகே டிஎஸ்பி பிரதீப் கொடி அணிவகுப்பை தொடங்கிவைத்து பங்கேற்றாா். கமாண்டா் டி.கே.செளத்திரி தலைமையில், நகர காவல் ஆய்வாளா் சிவானந்தம் முன்னிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு பேரணி எஸ்.பி.கோயில் தெரு, சபாநாயகா் தெரு, தெற்கு ரத வீதி, கீழ ரத வீதி, வடக்கு ரத வீதி, விஜிபி தெரு வழியாகச் சென்று மீண்டும் காந்தி சிலையை வந்தடைந்தது.