முகப்பு
ராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு மரியாதை

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு மரியாதை....

Updated On : 30 மார்ச், 2026 at 7:54 PM
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு.
பகிர்:

கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் திங்கள்கிழமை மாநில நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்துக்கு தமிழக நிதி அமைச்சரும், திருச்சுழி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளருமான தங்கம் தென்னரசு தனது ஆதரவாளா்களுடன் வந்தாா். அங்குள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது பிரசாரத்தை வீரசோழன் பகுதியிலிருந்து அவா் தொடங்கினாா்.