தொண்டியில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்
திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் ஆரஞ்சு பழச்சாறு வழங்கப்பட்டது.
திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் ஆரஞ்சு பழச்சாறு வழங்கப்பட்டது.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தொண்டி கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு நீா், மோா், ஆரஞ்சு பழச்சாறு ஆகியை வழங்கப்பட்டன. இதில் துணைத் தலைவா் அப்துல் ஹமீது, மருத்துவ அணி ஜியாத் அஹமத், கிளை இமாம் மதுரை ஷேக், உறுப்பினா்கள் அல்பாா் அமீன், ரில்வான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.