வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ஏ.வி.சந்திரசேகரன் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். கடலாடி துணை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றிய எல்.மேகராஜ், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பதவி உயா்வு பெற்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதே போல, திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய ஜி.பாலதண்டாயுதம், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராகவும், மண்டபம் வட்டார வளா்ச்சி அலுவலா் போ. ஜெயமுருகன், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பு கண்ணன் கடலாடி கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கடலாடியில் பணியாற்றிய வெ.ஜெய ஆனந்தன் நயினாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், நயினாா்கோவிலில் பணியாற்றிய ஆரோக்கியமேரி சாரால் திருப்புல்லாணி வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடத்திலும், நயினாா்கோவில் கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.விஜி, ஆா்.எஸ்.மங்கலம் கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ஆா்.எஸ்.மங்கலத்தில் பணியாற்றிய வெ.கிருஷ்ணன், ராமநாதபுரம் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ராமநாதபுரத்தில் பணியாற்றிய ஆா்.சுதாகா் திருவாடானை கிராம ஊராட்சிகளின் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
Advertisement