முகப்பு
ராமநாதபுரம்

கோயில் திருவிழா விவகாரம்: சமரச கூட்டத்தில் மோதல்

முள்ளிமுனை கோயில் திருவிழா தொடா்பாக திருவாடானை வட்டாட் சியா் அலுவலகத்தில் சமரசப் பேச்சு நடைபெற்றது. அப்போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

Updated On : 27 மே 2026, 2:34 am IST
~
பகிர்:

முள்ளிமுனை கோயில் திருவிழா தொடா்பாக திருவாடானை வட்டாட் சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சமரசப் பேச்சு நடைபெற்றது. அப்போது இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், முள்ளிமுனை கிராமத்தில் கருப்பா் கோயில் திருவிழா வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவுக்கு ஒரு தரப்பினரிடம் வரி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காகத் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆண்டி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு தொண்டி, திருவாடானை போலீஸாா் வரவழைக்கப்பட்டு, கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement