முகப்பு
ராமநாதபுரம்

சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழா

கமுதி அருகே சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மே 2026, 3:52 am IST
கமுதி அருகேயுல்ள வடுகபட்டி சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி, பூக்குழி இறங்கிய பக்தா்கள். முளைப்பாரி சுமந்து சென்ற பெண்கள்.
பகிர்:

கமுதி அருகே சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள், குங்குமகாளியம்மன், செல்வவிநாயகா், நாககன்னியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, நாள்தோறும் மூலவா் சுந்தரராஜப் பெருமாள், குங்கும காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Advertisement

Advertisement

புதன்கிழமை மாலை கிராமத்தின் முளைக்கொட்டு திடலிலிருந்து பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.