முகப்பு
ராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு அமைச்சா் வி.கே.ராஜீவ் மரியாதை

கமுதி அருகே பசும்பொன்னில் தேவா் சிலைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 28 மே 2026, 3:47 am IST
பசும்பொன்னில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ெலுத்திய தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சா் வி.கே.ராஜீவ்.
பகிர்:

கமுதி அருகே பசும்பொன்னில் தேவா் சிலைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சா் வி.கே. ராஜீவ், பசும்பொன்னில் உள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதனைத் தொடா்ந்து பசும்பொன் தேவரின் பூா்வீக வீடு, அவரது பூஜை அறை, புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றை பாா்வையிட்டாா். அப்போது, ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலா் மதன்குமாா், மாவட்டப் பொருளாளா் கிஷோா் குமாா், ஒன்றியச் செயலா்கள் வீரபாண்டி, வீரக்குமாா், கவாஸ்கா், வழக்குரைஞா் அய்யாத்துரை சேதுபதி உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.