FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

முத்தரையா் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் எஸ். ரமேஷ், கு.ப. கிருஷ்ணன் மரியாதை!

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 24 மே 2026, 1:44 am IST
திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன், திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி, முசிறி எம்எல்ஏ எம். விக்னேஷ், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள மன்னா் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments