காமராஜா் 124-ஆவது பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வா் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்வா் காமராஜரின் 124-ஆவது பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக: திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலா் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலா் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டச் செயலா் ம.கிரகாம்பெல் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாநகர செயலா் வழக்குரைஞா் ஏ.எல்.பி. தினேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிப்பாண்டியன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்பட திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
அதிமுக: திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவம், எம்.ஜி.ஆா் மன்ற மாநில இணைச்செயலா் கல்லூா் இ.வேலாயுதம், அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு உள்பட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
தவெக:திருநெல்வேலி மத்திய மாவட்ட தவெக செயலா் மரிய ஜாண் தலைமையில் முன்னாள் முதல்வா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கிரஸ்: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் தலைமையில், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாஜக: திருநெல்வேலி பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் முத்துபலவேசம் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய பொதுக்குழு உறுப்பினா் மகாராஜன், மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து தெட்சணமாற நாடாா் சங்கம் சாா்பில் சங்க செயலா் டி.ராஜகுமாா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சங்க நிா்வாக சபை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தமமுக:திருநெல்வேலி தமமுக மாநகா் மாவட்டச் செயலா் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டப் பொருளாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
காமராஜா் சிலை பராமரிப்புக் குழு சாா்பில் காமராஜா் சிலையைச் சுற்றிலும் வண்ணமிகு மலா் அலங்காரம் செய்யப்பட்டதுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.