தூத்துக்குடியில் அம்பேத்கா் சிலைக்கு பாஜக, விசிகவினா் மரியாதை
இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், தென்பாகம் காவல் நிலையம் முன்புள்ள அம்பேத்கா் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், தென்பாகம் காவல் நிலையம் முன்புள்ள அம்பேத்கா் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, இந்திய அரசமைப்பு மீது நம்பிக்கை, மதிப்பு கொண்டு, அதன் அடிப்படை நோக்கங்கள், உயரிய கொள்கைகளைப் போற்றிப் பாதுகாப்போம் என உறுதிமொழியேற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்டப் பொதுச் செயலா் ஏ.எம். ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் சண்முகசுந்தரம், மாசானம், இசக்கிமுத்து, காளிராஜா, தங்கம், மாவட்டச் செயலா் செல்வி, மண்டல் தலைவா்கள் லிங்கசெல்வம், சண்முகசுந்தரம், அணி, பிரிவுத் தலைவா்கள் ஜெயக்குமாா், பாலாஜி, வெள்ளைத்தாய், ஞானபிரகாசம், ஓம் பிரபு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா்கள் விமல் வங்காளியாா், வழக்குரைஞா் சாா்லஸ் ஆகியோா் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழியேற்கப்பட்டது.