ஜாகீர் உசேன் கல்லூரிக்கு கலையரங்கம் கட்ட ரூ.90 லட்சம்
இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரிக்கு கலையரங்கம் கட்டுவதற்கு இம்.எம்.சுதர்சனநாச்சியப்பன் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.90 லட்சம் வழங்கினார்.
இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரிக்கு கலையரங்கம் கட்டுவதற்கு இம்.எம்.சுதர்சனநாச்சியப்பன் எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.90 லட்சம் வழங்கினார்.
சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரிக்கு வருகை தந்தார். கல்லூரித் தாளாளர் மற்றும் நிர்வாகிகள், பேராசிரியர்கள் வரவேற்றனர்.
பின்னர் அவர் கல்லூரியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து கல்லூரி மாணவிகளிடம் அவர் உரையாடினார். அதன்பின் சுதர்சனநாச்சியப்பன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Advertisement
சிறுபான்மை சமுதாயம் மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் ஜாகீர் உசேன் கல்லூரியில் அதிகம் படித்து வருகின்றனர். மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இக்கல்லூரியில் புதிதாக இந்தாண்டு விடுதி வசதி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு இந்தக் கல்வியாண்டு மட்டும் தங்கும் வசதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
அடுத்த கல்வியாண்டு முதல் ஸ்காலர்ஷிப் பெற்று மாணவிகள் விடுதியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மேலும் இந்தக் கல்லூரிக்கு கலையரங்கம் அமைக்க எனக்கான தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நடப்பு நிதியாண்டில் ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளேன். 500-க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் கட்டப்படவுள்ள இந்த கலையரங்கத்துக்கான அடிக்கல்நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது என்றார்.