சிவகங்கை

நான்குவழிச்சாலைக்கு வழங்கிய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

DIN

மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கூடுதல் இழப்பீடுத் தொகை வழங்கக்கோரி திருப்பாச்சேத்தியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
   மதுரை-ராமேஸ்வரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்காக திருப்புவனம், மானாமதுரை பகுதியில் விவசா/ நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது 2009 ஆம் ஆண்டின் அரசு நில வழிகாட்டுதல் மதிப்பீட்டின்படி 2015 ஆம் ஆண்டு இந்த இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது. இந் நிலையில் 2012 ல் அரசு, நிலங்களுக்கான வழிகாட்டுதல் மதிப்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டது.அதன்படி தங்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கக்கோரி திட்டப் பணிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு முகமதுஅலி ஜின்னா தலைமை வகித்தார், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முருகப்பா, திரவியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT