சிவகங்கை

அரசு நிதி கையாடல்: ஊராட்சி செயலர்கள் 4 பேர் கைது

DIN

அரசு நிதி ரூ.49 லட்சத்து 67 ஆயிரத்தை கையாடல் செய்த வழக்கில் ஊராட்சி செயலர்கள் 4 பேரை சிவகங்கை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
         சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட படமாத்தூர், இலுப்பகுடி, குடஞ்சாடி, முடிகண்டம், அரசனிமுத்துபட்டி ஆகிய 5 ஊராட்சிகளின் நிதி பரிவர்த்தனைகளில் 08-01-2016 முதல் 15-05-2017 வரை நிதி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.
 இதுகுறித்து ஒன்றிய ஆணையர் பர்ணபாஸ் அந்தோணி கொடுத்த புகாரின் பேரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரனை சிவகங்கை நகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்தனர்.  விசாரணையில் பில்லூர் ஊராட்சி செயலர் முத்துப்பாண்டியும் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது, இதையடுத்து ஊராட்சி செயலர்கள் முத்துபாண்டி(பில்லூர்), ராஜா(இலுப்பகுடி),, கிருஷ்ணன்(குடஞ்சாடி), மருதமுத்து(முடிகண்டன்) ஆகிய நால்வரையும் சிவகங்கை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT