சிவகங்கை

20 நோயாளிகளின் உயிர் காக்க கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

DIN

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அவசரத் தேவைக்காக புதன்கிழமை ரத்ததானம் வழங்கிய அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை அக்கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அவசரமாக ரத்தம் தேவைபட்டது. இதற்காக ராஜராஜன் பொறியியல் கல்லூரியிலிருந்து மருத்துவமனைக்குச் சென்று 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். அவர்கள் வழங்கிய ரத்தம் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு உயிர்காக்கப்பட்டது.இதற்கு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நாகசுப்பிரமணியன், பேராசிரியர் பாபு ஆகியோர் மாணவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர். இதையடுத்து ரத்ததானம் செய்த மாணவர்களை கல்லூரி முதல்வர் அ. குமாரவடிவேல், துணை முதல்வர் ஹாயாசிந்த் சுகந்தி ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT