திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக்கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக்கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருப்புவனத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி தலைமை வகித்தார்.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், தேவையான மருந்து, மாத்திரைகள் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைக்குத் தேவையான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்துதர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தண்டியப்பன், சக்திவேல், கருப்பு,ரவி உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக அவர்கள் புதூர் பகுதியிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.