கல்லல் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை
காரைக்குடிஅருகேயுள்ள கல்லல் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்குடிஅருகேயுள்ள கல்லல் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்லல் வட்டாரக் கிளை நிர்வாகிகள் தேர்தல், கல்லல் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்தல் ஆணையராக தேவகோட்டை வட்டாரச் செயலர் அதிசய ராஜ், துணை ஆணையராக வட்டாரப் பொருளாளர் ஜோசப் பாஸ்கரன் ஆகியோர் செயல்பட்டனர்.
இதில், கல்லல் வட்டாரத் தலைவராக பீட்டர், செயலராக ஆரோக்கிய லூயிஸ் லெவே, பொருளாளராக சரவணன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினராக சேவியர் சத்தியநாதன், துணைத் தலைவர்களாக பீட்டர் அமல்ராஜ், ஜஸ்டின் திரவியம், முல்லைமலர், துணைச் செயலர்களாக ஜான் இக்னேஷியஸ், அண்ணாத்துரை, தமிழ்த்தென்றல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை, மாவட்டத் தலைலவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
பின்னர் நடைபெற்ற கல்லல் வட்டாரப் பொதுக் குழுக் கூட்டத்தில், கல்லல் வட்டார மாணவர்களின் நலன்கருதி இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், கல்லலில் உரிய வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.