சிவகங்கை

தேவகோட்டை அஞ்சலகத்திற்கு மாணவர்கள் களப்பயணம்

DIN

அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை  தேவகோட்டை அரண்மனை அஞ்சல் அலுவலகத்திற்கு களப்பயணம் சென்று அஞ்சலக செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டனர்.
  தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் களப்பயணம் சென்றனர். துணை அஞ்சலக அதிகாரி செல்வராஜ் வரவேற்று  அஞ்சலக  துறையின் செயல்பாடுகள் ,பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
 அஞ்சலக பணியாளர்கள் மாரிமுத்து,ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் செயல் முறை விளக்கம் அளித்தனர்.மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தனர்.
நிறைவாக பள்ளியின் சார்பாக மாணவி காவியா   நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT