சிவகங்கை

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ,ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவில், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு திருமஞ்சனம், மஞ்சள்பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு விசேஷ தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.
இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT