முகப்பு
சிவகங்கை

காரைக்குடி தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்குடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்   குறுகிய கால பயிற்சிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:36 AM
பகிர்:

காரைக்குடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்   குறுகிய கால பயிற்சிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டர், எலக்டீரிஷியன், பேசிக் பிட்டிங்  ஆகியவற்றிற்கு குறுகிய கால இலவச பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.   
 இப்பயிற்சி மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சியாளர்களுக்கு தினசரி 100 ரூபாய் போக்குவரத்து செலவுக்காக வழங்கப்படும்.  மேலும், பயிற்சியை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.  
பயிற்சிக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.  சேர விருப்பமுள்ள  விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை,  குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்கள் மற்றும் 3 புகைப்படங்களோடு காரைக்குடியில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 04565-220447 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.